SOILRANGER AGRI YIELD 

இந்த பிரபஞ்சம் அதில் வாழும் உயிரினங்களை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள ஒரே வழி இயற்கை விவசாயம்.
முன்னோர்கள் “உணவே மருந்து” என கருதி இயற்கை இடுபொருள் இலைகள் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களையும்,  கோமாதாவை (பசு) மையமாக வைத்து 18ம் நூற்றாண்டு  முன் வரை இயற்கை விவசாயம் கடைப்பிடித்தனர்.


பசுமை புரட்சி:


காலப்போக்கில் அதிக உணவுப்பொருட்கள் தேவைப்பட்டதால் உணவு பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க 19ம் நூற்றாண்டுக்கு பின்பு இரசாயன முறையை பயன்படுத்தி ஆரோக்கியமாக இருந்த மண்ணின் மீது இரசாயன உரங்களை பயன்படுத்தியதால் அதிக மகசூல் கிடைத்தது ஆனால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் எண்ணிக்கை மற்றும் “மண்” வீரிய தன்மை  குறைந்து நோய்கள் அதிகரித்து. விளைச்சல் குறைந்து நிலம் விவசாயத்திற்கு தகுதியற்ற நிலை வந்தது. மண்,விதைகள் மலட்டு தன்மையடைந்ததால் உலகில் பல நாடுகள் இயற்கை விவசாயம் மீது நாட்டம் ஏற்படுத்தி 1.தொழு உரம், 2.உயிர் உரம், 3.பசுந்தாள் உரம், 4.மட்கு உரம்,5.மண்புழு உரம், 6.தென்னை நார் உரம்,7. மீன் கழிவு உரம் என்று  இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.


மண் பரிசோதனை :


# காரம், அமிலம், சுண்ணாம்பு  5..ன்ற.
தன்மை அறிந்து அதற்கேற்ற பயிர்கள்  தேர்ந்தெடுக்கவும்.
# மண்ணின் சத்துக்கள் குறைபாட்டை அறிந்து சரியான அளவு உரங்களை பயன்படுத்துதல்.
# உரத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பயிர்களுக்கு கிடைக்க செய்தல்.
# உரம் செலவை  குறைத்து அதிக மகசூல் கிடைக்க செய்தல்.

மண் எடுக்கும் முறை:



# பயிரிடும் முன்பு பயிர்களின் வேர்கள் செல்லும் ஆழத்திற்கு ஏற்ப உள்ள மண்ணை, 1 ஏக்கர் நிலத்தில் 5 இடங்களில் மண் எடுத்து அனைத்தும் ஒன்றாக கலந்து அதில் 1/2 கிலோ மண்ணை மட்டும் ஆய்வுக்கு கொடுக்கவும்.
  # எரு உள்ள இடம், வரப்பு ஓரம், நீர் கசிவு பகுதி, மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை  ஆய்வுக்கு எடுக்க கூடாது.

மண் பரிசோதனை இடங்கள்:


# மாவட்ட வேளாண்துறை மண் ஆய்வு கூடம்.
# பயிற் மருத்துவ கிளினிக்.
# நடமாடும் மண் ஆய்வு கூடம்.
# வேளாண் கல்லூரி.
# தனியார் வேளாண் சேவை மையம்.
# உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள்

நீர் பரிசோதனை:


# ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்றில் 1/2 மணி நேரம் நீர் இறைத்தபின் நீர் ஆய்வுக்கு எடுக்க வேண்டும்.
# நீரின் உவர், கார, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட், இவைகளின் தன்மை நிலைகளை அறியலாம்.
# நீரின் இரசாயன தன்மை மற்றும் ஊட்டசத்துகளின் விகிதம் அறியலாம்.


பயிர்களுக்கு தேவையான சத்துக்கள்:

இயற்கையாகவே ஒளி சேர்க்கை சத்துக்கள்:- கார்பன் (C)- 45% , ஹைட்ரஜன் (H)- 6% , 
ஆக்சிஜன் (O)-45%

முதல்நிலை பேரூட்ட சத்துக்கள்:



நைட்ரஜன் (N)-1.5% , 
பாஸ்பரஸ்( P)-  0.2.5% ,
பொட்டாசியம் ( k)- 0.1%.

இரண்டாம் நிலை பேரூட்ட சத்துக்கள் :

கால்சியம் (ca)- 0.5ppm, 
சல்பர் (s)- 0.1%,
மெக்னிசியம் (mg)- 0.2ppm, 

நுண்ணூட்ட சத்துக்கள் :

போரான்(B)- 0.02ppm, மாங்கனிசு(Mn)-0.005 ppm, 
காப்பர் (Cu)-0.006ppm, 
ஜிங்க்( Zn)-0.002ppm, 
இரும்பு (Fe)- 0.01ppm, மாலிப்டினம்(Mo)- 0000.1ppm,
குளோரின் (Cl)- 0.02ppm,
நிக்கல் ( Ni)- 0.00001ppm.

SOILRANGER AGRI YIELD  நிறுவனம்:


பல்வேறு வடிவங்களில் 100% இயற்கை முறையில் வேளாண் இடுபொருள்களை பயன்படுத்தி தயாரித்து வருகின்றனர்.
மண் வளம், பயிர்களின் ஆரோக்கியம்,அதிக மகசூல்,நோய் கட்டுப்படுத்துதல் இவைகளை மையமாக வைத்து புழுக்கள், மீன்கள், பறவைகள், கால்நடைகள், கடல் தாவரங்கள், நிலத் தாவரங்கள்  இவைகளின் கழிவுகளை பயன்படுத்தி இதனுடன் பேரூட்ட சத்துக்கள், நுண்ணூட்ட சத்துக்கள், அமினோ அமிலங்கள், ஹியுமிக் அமிலம், அசோஸ்பைரில்லம்,ரைசோபியம் அசோடோபாக்டர், பாஸ்போபாக்டிரியா,டைகோடர்மா விரிடி, சூடோமோனஸ், போன்றவற்றை சரியான விகிதம் கலந்து அனைத்து பயிர்களுக்கும் ஏற்றவாறு தயாரிக்க படுகின்றது.
  

SOILRANGER AGRI YIELD  நிறுவனத்தின் தயாரிப்புகள்:

1.YIELD + 2312( powder Form)
2.YIELD + 512 ( Pellet)
3.VIGORWTH ( liquid)
4.ONE DEATH ( கலைக் கொள்ளி)
5.SOIL BLACKER ( Humic)
6. SPRAYGO (இயற்கை பூச்சிவிரட்டி)

பயன்கள்:


# மண் வளம் மீட்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
# நுண்ணுயிர்கள் பெருக்கம்.
# உற்பத்தி தரம் அதிக வருவாய். 
# குறைந்த முதலீடு அதிக மகசூல்.
# மண்புழு அதிகரித்தல்.
# மண் சிதைவு கட்டுப்படுத்தும் .
# காற்று, நீரில் உள்ள சத்துக்களை            பயன்படுத்த  செய்தல்.
# இலைகளின் இளம்பச்சை, வெளீர்
  நிறத்தை கரும்பச்சை நிறமாக மாற்றி இலையின் ஆயுள் அதிகரிக செய்தல்.
# இளம் வேர்கள் அதிக உற்பத்தி செய்தல்.
# மண், காற்றில் உள்ள கார்பன் ஈர்த்து பாசிகளை உருவாக்குதல்.
# மண்ணில் உள்ள இரசாயனத்தை கட்டுப்படுத்தி சமநிலை வைத்தல்.


அன்பு விவசாயிகளே…..
இயற்கை விவசாயம் செய்வோம்!
மாசற்ற உலகை படைப்போம்!
நோயற்ற வாழ்வை அமைப்போம்!.